துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் | Turkey earthquake | Earthquake
துருக்கியின் மர்மாரிஸ் நகரில் 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகள் குலுங்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது.
ஜூன் 03, 2025