உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / துருக்கிக்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட்களுக்கு நேர்ந்த சோகம் turkey| ski resort| fire| 66 dead

துருக்கிக்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட்களுக்கு நேர்ந்த சோகம் turkey| ski resort| fire| 66 dead

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலு மலை உச்சியில் கிராண்ட் கர்தல்காயா ஸ்கை ரிசார்ட் உள்ளது. 12 மாடிகள் கொண்டது. குளிர்காலத்தில் பனிச் சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்காக சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இங்கு 238 பேர் தங்கி இருந்தனர். இன்று துருக்கி நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு ஹோட்டலின் உணவு தளத்தில் தீ பிடித்து மற்ற அறைகளுக்கும் பரவியது. தூங்கும் நேரம் என்பதால் பலர் உறக்கத்திலேயே இறந்தனர். தீ விபத்து அறிந்து சிலர், போர்வை போர்த்திக்கொண்டு மாடியில் இருந்து குதித்துள்ளனர். அவர்களில் 2 பேர் இறந்தனர். மொத்தம் 66 பேர் இறந்தனர். காயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்றப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !