உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திமுக கவுன்சிலர், ஆசிரிய தம்பதிக்கு சோக நிகழ்வு | Theni | Uthamapalayam | DMK councillor | Accident

திமுக கவுன்சிலர், ஆசிரிய தம்பதிக்கு சோக நிகழ்வு | Theni | Uthamapalayam | DMK councillor | Accident

ேனி உத்தமபாளையம் 14வது வார்டு திமுக கவுன்சிலர் மணிகண்டன் வயது 45. இவரது மனைவி சுகன்யா வயது 35, அரசு பள்ளி ஆசிரியை. நேற்று இரவு மணிகண்டன், சுகன்யாவுடன் கம்பம் சென்றுவிட்டு டூவிலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 9 மணி அளவில் அனுமந்தன்பட்டி அருகே வந்தபோது சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் டூவிலரின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. டூவிலரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுகன்யா மணிகண்டன் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த மணிகண்டன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரது உயிரும் பிரிந்தது. விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். #Theni | #Uthamapalayam | #DMKcouncillor | #Accident | #Investigation

டிச 10, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N S Sankaran
டிச 10, 2025 14:45

கார் இல்லாத தி மு க கவுன்சிலரா? அதிசய மனிதர். அதனால் தானோ இறைவன் விரைந்து அழைத்துக்கொண்டான்.


Ramona
டிச 10, 2025 11:58

பாவம் இவர்கள் இருவருமே உண்மையிலேயே அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் , ராஜா மாதிரி வாழவேண்டிய வயதில் அகால துர் மரணம் ஏற்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !