வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணிக்கு நடந்த சோகம் | Vellore | Train | Pregnant
ஆந்திராவை சேர்ந்த பெண் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 4 மாத கர்ப்பிணியான இவர் கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார். வேலூர் கே.வி குப்பம் அருகே ரயில் வந்த போது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் அங்கே இருந்துள்ளது. பெண்ணிடம் தகாத முறையில் நடந்த கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது லேடீஸ் கோச்; இங்க எதுக்கு நீங்க ஏறி இருக்கீங்க என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியும் விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கத்தி கூச்சல் போட்டார். பயந்து போன கும்பல் ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டது. சக பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கே.வி குப்பம் அருகே தண்டவாளத்தில் படுகாயமடைந்த நிலையில் கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டார். அவரது கை,கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அருகில் இருந்த அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார்.