/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ காரை மறித்து கண்ணாடியை உடைத்ததாக இப்ராகிம் மகன் புகார் | BJP minority wing leader | Vellore Ibrahim
காரை மறித்து கண்ணாடியை உடைத்ததாக இப்ராகிம் மகன் புகார் | BJP minority wing leader | Vellore Ibrahim
பாஜவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம். இவரது மகன் முகமது அலி. இவர் நேற்று போரூரில் இருந்து முகலிவாக்கம் நோக்கி காரில் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முகலிவாக்கம் அருகே முகமது அலி காரை மடக்கி வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர். அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த கும்பல் காரின் வலது பக்க கண்ணாடியை உடைத்து எச்சரிக்கை செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போரூர் போலீசில் முகமது அலி புகார் அளித்துள்ளார். அந்த கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
ஜூலை 01, 2024