/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ போலீஸ் அனுமதி மறுத்ததால் நடு ரோட்டில் நின்ற விநாயகர் சிலை | Vinayagar chathurthi | Trichy police
போலீஸ் அனுமதி மறுத்ததால் நடு ரோட்டில் நின்ற விநாயகர் சிலை | Vinayagar chathurthi | Trichy police
திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில் விநாயகர் சதுர்த்தியின்போது எப்போதும் உயரமான விநாயகர் சிலை வைக்கப்படும். இந்த ஆண்டு பீடத்துடன் சேர்த்து 10 அடி உயரம் வரை விநாயகர் சிலை வைத்துக்கொள்ளலாம் என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஏற்கனவே அறிவித்திருந்தார். திருச்சி மாவட்டத்தில் 1147 சிலைகளுக்கும் மாநகரில் 242 சிலைகளுக்கும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்நிலையில், திருச்சி திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் அருகே அனுமதித்ததை விட அதிக உயரத்தில் விநாயகர் சிலை எடுத்து வந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
செப் 06, 2024