சேலம் மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டர்களை சீண்டிய HOD - விசாரிக்கிறது விசாகா கமிட்டி
சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லுாரியில் துறை தலைவராக இருப்பவர் டாக்டர் ராஜேஷ். இவர் ஆபாசமாக பேசி சீண்டுவதாக டிஜிபி சைலேந்திரபாபுக்கு 8 பெண் பேராசிரியைகள் புகார் மனு அனுப்பினர். இதை விசாரிக்க சேலம் துணை கமிஷனர் லாவண்யாவுக்கு டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, லாவண்யா விசாரணையை தொடங்கியுள்ளார். இன்னொரு புறம் கல்லுாரி டீன், சமூக நலத்துறை அதிகாரிகள் அடங்கிய விசாகா கமிட்டியும் புகார் குறித்து விசாரிக்கிறது. விசாரணையின் முடிவில் மருத்துவ கல்வி இயக்குனர், டிஜிபிக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என கல்லுாரி நிர்வாகம் கூறியது. பேராசிரியைகள் கூறிய குற்றச்சாட்டை ராஜேஷ் மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பேராசிரியைகள் சரியாக பணிக்கு வருவதில்லை. இதை நான் கேட்டதால் என் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என்றார்.