நெல்லை சம்பவத்தில் சுர்ஜித் பின்னணி பற்றி பகீர் kavin case | who is surjith | tirunelveli kavin case
தமிழகத்தையே பதற வைத்த நெல்லை ஆணவ படுகொலையை அரங்கேற்றிய சுர்ஜித் பின்னணி குறித்த தகவல் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த விவசாயி சேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் 27 வயது மகன் கவின் சாஃபட்வேர் இன்ஜினீயர். சென்னை ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கவின் தூத்துக்குடி பள்ளியில் படித்த போது, சக மாணவியை காதலித்தார். அவரது காதலி சித்த மருத்துவர் ஆனார். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலையில் சேர்ந்தார். 2 பேரும் 8 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர். கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அவரது காதலியோ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இதனால் காதலி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கவினை காதலிக்க கூடாது என்று மகளை எச்சரித்து வந்தனர். காதலியின் அப்பாவும் அம்மாவும் எஸ்ஐ. இவர்களது மகன் சுர்ஜித்துக்கும், அக்காவின் காதல் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று தனது தாத்தாவுக்கு வைத்தியம் பார்க்க காதலி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கவின் வந்தார். அவர் வந்திருக்கும் தகவலை அறிந்த காதலியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனைக்கு வந்தார். உங்களுடன் பேச வேண்டும் என்று சொல்லி சுர்ஜித்தை பைக்கில் அழைத்து சென்று, வெட்டி படுகொலை செய்தார். சாதி ஆணவத்தில் நடந்த இந்த கொடூர கொலை தமிழகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது.