தனியாக வசித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஈரோடு மக்கள் அதிர்ச்சி Woman dies hacked to death Erode polic
ஈரோடு எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா (65). இவர், கணவர் மணிகண்டன் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது ஒரே மகன் மகேந்திர சேனாதிபதி. இவருக்கு பாண்டிச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மகன் பாண்டிச்சேரிக்கு போனதும் ஈரோடு வீட்டில் கமலா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். தினமும் இரவில் தாயாருக்கு போன் செய்து பேசுவது மகேந்திர சேனாதிபதியின் வழக்கம். அதுபோல நேற்றிரவு 9 மணியளவில் போன் போட்டார். ஆனால், செல்போனை அம்மா எடுக்கவில்லை. ஒரு மணிநேரத்துக்கு மேலாகியும் ரிப்ளை வரவில்லை. மகேந்திர சேனாதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு போன் செய்து, போய் பார்க்கும்படி கூறியுள்ளார். அந்தப் பெண் சென்று பார்த்தபோது வீட்டில் முன்பக்க அறையில் கமலா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது . அதைக் கேட்டு பதறிய மகேந்திர சேனாதிபதி, ஈரோடு போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். உடனே, ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார் . #ErodePolice #CrimeNews #JusticeForVictims #SPSujaatha #HackedToDeath #ChainTheft #TrueCrime #CrimeInvestigation #WomenSafety #PoliceInquiry #BreakingNews #ErodeCrime #VictimSupport #LawEnforcement #CommunityAwareness