காருக்குள் கடைசி தருணங்கள்: என் புள்ளைக்கு மூச்சு வருது: தாய் அலறல் | rithanya last moments
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11ம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவிநாசி பழங்கரையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார். திருமணத்துக்கு 300 சவரன் நகை போட்டுள்ளனர். கூடுதலாக 200 சவரன் கேட்டு கணவன் மற்றும் அவரது வீட்டார் கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நிலையில், தாய் வீட்டுக்கு கடந்த வாரம் வந்தார். கணவர் கவின்குமார் ரிதன்யாவுக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். இதையெல்லாம் சொன்னால் அம்மா அப்பா கஷ்டப்படுவார்கள் என நினைத்து மனம் புழுங்கிய ரிதன்யா, கடந்த சனிக்கிழமை பெற்றோரிடம் கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.