ஓட்டலில் பெண்ணுக்கு கோரம்: 17 முறை கத்தியால் குத்திய காதலன் | Shankar | harini | manasa | Bengaluru
ஒரே நாள் இரவில் 2 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூருவை அதிர வைத்துள்ளது. ஒரு பெண்ணை காதலனும், இன்னொரு பெண்ணை கணவனும் கொலை செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு: பெங்களூருவின் புறநகரில் உள்ள கெங்கேரியை சேர்ந்தவர் ஹரிணி (33). திருமணமாவர். அதே பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் யஷாஸ்சுடன் Yashas சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 2 குழந்தைகளுக்கு தாய் என தெரிந்தும் ஹரிணியின் அழகில் மயங்கி தீவிரமாக காதலிக்க துவங்கினார் யஷாஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினர். ஹரிணி காதலனுடன் சுற்றித் திரிவதை உறவினர்கள் பார்த்து விட்டனர். 2 குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு இப்படி நீ செய்யலாமா? என உறவினர்கள் திட்டினர். கணவனுக்கும் விஷயம் தெரிய வர குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் யஷாஸ் உடன் தொடர்பை விட்டு விட முடிவு செய்தார். யஷாஸ் பலமுறை போன் செய்தும் ஹரிணி அட்டென்ட் செய்யவில்லை. உறவை முடித்துக்கொள்வதாக மெசேஜ் மட்டும் அனுப்பினார்.