வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா திமுக கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அனைவருக்கும் டிஎன்ஏ சோதனை செய்து வைப்பது நல்லது
செய்தி சுருக்கம் | 01 PM | 04-07-2025 | Short News Round Up | Dinamalar
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தார். அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பேராசிரியை நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் மீது, கல்லூரி மாணவிகளை தகாத முறையில் நடத்தியது, வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது, சக பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியது, கல்லூரி முதல்வருக்கு கட்டுப்படாதது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் நிகிதாவை இடமாற்றம் செய்யுமாறு அவரது துறையின் மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு மே மாதம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மூலம் மதுரையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், நிகிதா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ததுடன், அதுதொடர்பாக விரிவான அறிக்கையை கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பினார்.
எல்லா திமுக கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் அனைவருக்கும் டிஎன்ஏ சோதனை செய்து வைப்பது நல்லது