உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 13-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 13-09-2024 | Short News Round Up | Dinamalar

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில், கைதான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் இன்று ஜாமின் வழங்கியது. அமலாக்கத்துறை, சிபிஐ என 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாதம் கழித்து கெஜ்ரிவாலுக்கு சிறை கதவு திறந்தது. அவரை வரவேற்க திகார் சிறைக்கு வெளியே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் பலர் திரண்டனர். கொட்டும் மழையிலும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஆடி, பாடி வரவேற்பு கொடுத்தனர். வெளியே வந்ததும் காரில் ரோடு சென்ற கெஜ்ரிவால், கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். நான் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த போது கடவுள் என்னை கைவிடவில்லை. இந்த விவகாரத்திலும் நான் நேர்மையாக இருந்ததால் கடவுள் என்னை காப்பாற்றி உள்ளார். சிறை வைத்து என்னை ஒடுக்க நினைத்தனர். 100 மடங்கு பலத்தோடு வெளி வந்துள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றார். அன்னப்பூர்ணா உரிமையாளர் தாமாக முன்வந்துதான் மன்னிப்புக் கோரினார். பாஜ தரப்பு யாரையும் மிரட்டவில்லை என பாஜ எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார். நான் அவர் கடையில் ஜிலேபி சாப்பிட்டதும் இல்லை, சண்டை போட்டதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ