செய்தி சுருக்கம் | 08 PM | 11-10-2024 | Short News Round Up | Dinamalar
திருச்சியில் இருந்து சார்ஜா கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு 141 பயணிகளுடன் தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடிக்கிறது மாலை 5.40 மணிக்கு கிளம்பிய நிலையில் விமான சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை எரிபொருள் தீரும் நிலையில் விமானம் தரையிறக்கப்படும் என தகவல் திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் அக்னி வீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங் வயது 20, சைபத் ஷிட் வயது 21 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஹவில்தார் அஜித்குமார் தியோலாலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் எதிர்பாராத விபத்து என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.