உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 01-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 01-06-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, வைகோ, அன்புமணி, சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. திமுக கூட்டணி சார்பில் 4 எம்பிக்களையும், அதிமுக கூட்டணி சார்பில் 2 எம்பிக்களையும் தேர்வு செய்யலாம். திமுக கூட்டணியில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தற்போதைய எம்பி வில்சன், சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவிடம், கூட்டணி கட்சியான தேமுதிக எம்பி சீட் கேட்டு, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் எம்எல்ஏவும், வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, தேமுதிகவுக்கு தற்போது ராஜ்யசபா சீட் இல்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும். அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக தொடர்கிறது என கூறினார்.

ஜூன் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை