இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | ஸ்டாலின் வெட்கி தலைகுனியட்டும் | 1 PM | 03-11-2025
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நண்பரை அடித்து விரட்டி விட்டு மாணவியை திமுக பிரமுகர் ஞானசேகரன் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் திமுக அரசின் தவறுகளை பட்டியலிட்டு கிழித்தவர் அண்ணாமலை. குற்றம் நடந்த பிறகு போலீஸ் அதிகாரிக்கும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்துக்கும் ஞானசேகரன் போன் செய்தது எதற்காக? யாரை காப்பாற்ற துடிக்கிறது இந்த திமுக அரசு? என்பது போன்ற அண்ணாமலை கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என மக்கள் பேசிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், கோவையை உலுக்கிய கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச்செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கை காக்கவோ, காவல்துறையினரை பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். #KovaiCollegeIncident #CoimbatoreAirport #BoyfriendAttack #PeelameduPolice #CrimeNews #AnnamalaiBJP #AnnaUniversity #StudentSafety #CoimbatoreCrime #JusticeForVictims