இன்றைய மதிய முக்கியச் செய்திகள் |52,000 பேரை மீட்ட இந்தியா | மோடி பெருமை | 1 PM | 08-03-2026
ஈரானில் பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் போரை துவங்கின. முதல் நாளே போர் விமானங்களை அனுப்பி சரமாரியாக குண்டு வீசின. இதில் ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி் கொடுக்க இஸ்ரேலையும், சவுதி, கத்தார், குவைத், அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட சக முஸ்லிம் நாடுகளையும் ஈரான் சரமாரியாக தாக்க ஆரம்பித்தது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட உலகின் பல நாட்டு மக்கள் பீதியில் உறைந்தனர். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று போராடினர். பலரும் கிடைக்கும் விமானங்களில் ஏறி தாயகம் திரும்பினர். சிறப்பு விமானங்கள் மூலமும் மீட்கும் பணி துவங்கியது. இந்த நிலையில், மார்ச் 1 முதல் 7ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வளைகுடா மற்றும் மேற்காசிய பிராந்தியங்களில் இருந்து 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர் என்று நம் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.