இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | மூலப்பத்திரம் எங்கே | 1 PM | 12-06-2026 | DINAMALAR
திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை இப்போது தவெக அரசு தூசு தட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், அமைச்சராகவும் இருந்தவர் வைத்திலிங்கம். 2016ல் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி கோரிய தனியார் நிறுவனத்திடம் 27.9 கோடி ரூபாயை வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் புகார் செய்திருந்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, 2024ல் வைத்திலிங்கம், அவரது மகன்கள் நடத்தும் நிறுவனம் உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையே வைத்திலிங்கம் திமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு வழக்கு விசாரணையின் போக்கு மாறியது. வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் மூலம் அந்த வழக்கை திமுக அரசு முடித்து வைத்தது. #Vijay #ThalapathyVijay #TamilCinema #Kollywood #HappyBirthdayVijay #PressMeet #CelebrityNews #ViralVideo #TamilNews #BreakingNews #ActorVijay #FanMoment #EntertainmentNews #விஜய் #தளபதிவிஜய் #தமிழ்சினிமா #கோலிவுட் #தமிழ்செய்திகள் #dinamalar