உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய பிற்பகல் முக்கியச் செய்திகள் | ஸ்டாலின் கடிதம் | 1 PM | 14-11-2026

இன்றைய பிற்பகல் முக்கியச் செய்திகள் | ஸ்டாலின் கடிதம் | 1 PM | 14-11-2026

முதல்வர் விஜய்க்கு, திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்திருப்பதாகவும், இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பிரதமர் மோடி முன்னிலையில், கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியிருக்கிறார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்க முடியாது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நம் விவசாயிகளை காக்க தமிழகத்தின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம். கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாக பேசத் துவங்கி இருக்கும் நிலையில் இனியும் தமிழக அரசு மவுனம் காக்கக்கூடாது. நமது ஒற்றுமையையும் கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானத்தையும், தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள், அனைத்து கட்சி எம்பிக்கள் இணைந்து பிரதமரை சந்தித்து அளிக்க வேண்டும். காவிரி உரிமையை பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம் என கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நவ 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ