இன்றைய மதிய முக்கியச் செய்திகள்| நகலை கொளுத்திய ஸ்டாலின் | 1 PM | 16-04-2026| DINAMALAR
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் சட்ட திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. இதை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கைவிடாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்துக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற ஸ்டாலின், நல்லிபாளையத்தில் ஒரு தொண்டர் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏற்றி தனது எதிர்ப்பை தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தினார். இது குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை வைத்து அரசியல் செய்கிறார். டில்லியில் உள்ள சிலர் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள். ஏதேனும் ஒரு சாக்குப்போக்கை கூறிக்கொண்டு பெண்கள் இடஒதுக்கீட்டை முடக்க நினைத்தால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமான தருணமாக இருக்கும். தமிழகமோ அல்லது எந்த மாநிலமோ தொகுதி மறுவரையறை பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களை யாரும் தவறாக வழிநடத்தவோ, திசைதிருப்பவோ வேண்டாம். இதுவே எனது வேண்டுகோள் என கிரண் ரிஜிஜு கூறினார். #MKStalin #KirenRijiju #DMK #CentralGovernment #TamilNaduPolitics #Delimitation #PoliticalNews #BreakingNews #TNPolitics #IndiaPolitics #ReservationBill #PoliticalDebate #TrendingNews