இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு | 1 PM | 21-10-2025
தீபாவளி பண்டியை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வளச்சி அடைந்த, சுய சார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைவோம் என அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் இரண்டாவது தீபாவளி இது. அநீதிக்கு எதிராக போராடவும் நீதியை நிலை நாட்டவும் ராமர் நமக்கு கற்றுத் தந்துள்ளார். அதன் உதாரணம் தான் சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை. வளர்ச்சியையே பார்க்காமல் இருந்த பகுதிகளிலும் இன்று தீபாவளி விளக்கு எரிகிறது. நக்சல்களில் ஆதிக்கத்தில் இருந்த பல பகுதிகள் இன்று வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றன. அங்கெல்லாம் மக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டுவதை பார்க்க முடிகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால், சேமிப்பு திருவிழாவில் மக்கள் பலன் அடைந்துள்ளனர். உலகின் மூன்றாவது பொருளாதார சக்தி என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணிக்கிறோம். வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக சுயசார்பு அவசியம். வளர்ந்த பாரதம், சுயசார்பு இந்தியாவை உருவாக்க மக்கள் பெரும்பாலும் உள்நாட்டு பொருட்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். நாம் உண்ணும் உணவில் 10 சதவீதம் எண்ணெய் குறைத்து, உடல் ஆரோக்கியத்திற்காக யோகா செய்து, உடல் ஆரோக்கியம் பேணுவோம். சுத்தம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்போம். எல்லா மொழிகளையும் மதிப்போம். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற வகையில், நாம் இதுபோன்ற நடவடிக்கைகளை கடைபிடித்து வளர்ந்த பாரதத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.