செய்தி சுருக்கம் | 01 PM | 23-02-2025 | Short News Round Up | Dinamalar
தெலுங்கானாவின் நாகர் கர்னுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு பகுதியில் இருந்து, பிற இடங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கம் போல 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனியன்று சுரங்கப்பாதைக்குள் சென்றனர். அவர்கள் 14 கிலோமீட்டர் துாரம் உள்ளே சென்று பணியில் ஈடுபட்ட நிலையில், சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கப்பாதை திடீரென இடிந்ததில் எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இரவு பகலாக மீட்பு பணி தொடர்கிறது. Breath சம்பவம் குறித்து அமைச்சர் உத்தம் குமார் விளக்கம் அளித்தார். சுரங்கத்தின் உள்ளே 14வது கிலோமீட்டரில் மண் சரிந்து இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்தின் உள்ளே சிக்கியவர்களில் இரண்டு பொறியாளர்கள், இரண்டு இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் நான்கு தொழிலாளர்கள் அடங்குவர். அவர்களில் ஆறு பேர் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள். பொறியாளர்கள் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். முதலில் சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதைக் கண்ட இயந்திர ஆபரேட்டர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து 42 தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். இருப்பினும், அதற்குள் பெரிய அளவிலான மண் சரிந்து, மறுபுறம் இருந்த 8 பேர் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்களை பாதுகாப்புடன் மீட்க உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்ட குழுவினரிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வர அரசு தீவிரமாக நடவ