இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | ₹10 ஆயிரம் கருணத்தொகை | 1 PM | 23-02-20 |Dinamalar
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டா மாறுதல், நில அளவை சான்றிதழ் போன்றவற்றை பெற வந்த மக்கள் அவதி அடைந்தனர்.