உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 25-05-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 25-05-2025 | Short News Round Up | Dinamalar

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறது. அதன்படி 122வது வாரமாக இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. கோபம் மற்றும் உறுதியால் நிரம்பியுள்ளது. சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படைகள் வெளிப்படுத்திய வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சிந்தூர் நடவடிக்கை ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் இராணுவப் நடவடிக்கை மட்டுமல்ல; நமது உறுதிப்பாடு, தைரியம் மற்றும் மாற்றமடைந்து வரும் இந்தியாவின் புதிய முகம். இந்த புதிய முகம், முழு நாட்டையும் தேசபக்தியால் நிரப்பி, மூவர்ணக் கொடியின் சாயல்களில் வரைந்துள்ளது. பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டுள்ளனர். நாட்டின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில், இளைஞர்கள் மூவர்ண கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று ஆயுதப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர் என பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ