செய்தி சுருக்கம் | 01 PM | 25-09-2024 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி வியாழக்கிழமை அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. வழக்கமாக காலாண்டு விடுமுறை ஒருவாரம் காலம் விடப்படும். இந்தாண்டு விடுமுறையில் செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை துவங்கி, அக்டோபர் 2ம் தேதியான 5 நாள்களில் திங்கள், செவ்வாய் தவிர ஏனைய நாள்கள் இயல்பாகவே பொதுவிடுமுறையாக உள்ளது. மேலும் அக்டோபர் 3ம் தேதி வியாழன்று பள்ளி துவங்கினாலும் வெள்ளிக்கிழமையை அடுத்து 2 நாள்கள் விடுமுறை வருவதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பெற்றொர் வலியுறுத்தி இருந்தனர். விடைத்தாள் திருத்துவதற்கு அவகாசம் வேண்டும் என ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.