உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 25-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 25-10-2024 | Short News Round Up | Dinamalar

2020ல் லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் எண்ணிக்கை தெரியாத அளவில் பலரும் இறந்தனர். அப்போது முதல் சீன பொருட்கள் இறக்குமதி மற்றும் இந்தியாவில் அந்நாட்டின் முதலீடுகளை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகளை நம் அரசு கடைப்பிடித்து வருகிறது. நுாற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. விசா ஒப்புதல்களும் தாமதப்படுத்தப்பட்டன. உலகின் மிக முக்கிய சந்தையான இந்தியாவில் தன் பொருட்கள் மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதில் சீனா சிரமத்தை சந்தித்தது. இது இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக முன்னணி தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்து வந்ததன. சீனா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். செமிகண்டக்டர், மின்சார வாகன உதிரிபாகங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட அவசியமான பொருட்கள் உற்பத்தியில் முதலீடு பாதிக்கப்படுவதாகவும் கூறினர். இந்த சூழலில் ரஷ்யாவில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சு நடத்தினார். இருநாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கு தீர்வுகாண இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியா - சீனா தரப்பில் சிறப்பு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து அவ்வப்போது சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதகமான இந்த சூழலால் இந்தியா கடைப்பிடிக்கும் தீவிர கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படலாம் என தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சீன நிறுவனமான பிஒய்டியின் கிட்டத்தட்ட 8,400 கோடி ரூபாய் முதலீட்டிலான மின்சார வாகன திட்டம் வேகம் பெறக்கூடும் என தெரிகிறது. அதே நேரம் உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்க தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும். அன்னிய நேரடி முதலீடு தேவை என்பதற்காக கண்மூடித்தனமாக எதையும் அனுமதிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ