உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 16-07-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 16-07-2025 | Short News Round Up | Dinamalar

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு, மதுரையில் பந்தக்கால் நடும் விழா இன்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை; என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி