உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய காலை முக்கியச் செய்திகள் | விளக்கம் கேட்ட அமித்ஷா | 8 AM | 02-11-2025

இன்றைய காலை முக்கியச் செய்திகள் | விளக்கம் கேட்ட அமித்ஷா | 8 AM | 02-11-2025

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், மாபெரும் ஊழல் நடந்துள்ளது என அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத் துறை அறிக்கை அளித்துள்ளது. முதலில் இது ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் டில்லியிலும் பெரிதாக எதிரொலித்துள்ளது. அமலாக்கத் துறை அறிக்கை எப்படி லீக் ஆனது? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார். அமலாக்கத் துறையினரோ நாங்கள் வெளியிடவில்லை என கூறியுள்ளனர். அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய இந்த ரிப்போர்ட்டை தமிழக போலீசார் சிலர் லீக் செய்துள்ளனர் என அமித்ஷாவிடம் சொல்லப்பட்டதாம். தமிழக போலீசில் சில அதிகாரிகள் திமுகவுக்கு எதிராக உள்ளனர். திமுக சொல்லும் வேலைகளை சட்டத்துக்கு எதிராக இருந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் சில சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நேருவிற்கு எதிரான அமலாக்கத் துறை அறிக்கையை லீக் செய்துள்ளார் என்கின்றனர் டில்லி அதிகாரிகள். #ED | #MinisterKNNehru | #JobScam | #DMK | #AmitShah

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை