/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 06-06-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 06-06-2025 | Short News Round Up | Dinamalar
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக, பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கு கத்ரா-ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். மேலும் அந்த வழித்தடத்தில் உள்ள உலகின் உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 1,315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலமான அஞ்சி காட் பாலத்தையும் திறந்து வைக்கிறார் மொத்தம் 46 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டங்களை ஜம்மு காஷ்மீரில் துவக்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 06, 2025