உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 13-09-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 13-09-2024 | Short News Round Up | Dinamalar

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு ஆஸ்பிடல் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு ஆஸ்பிடலில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவர் 2 மணிநேரம் காத்திருந்த நிலையில், டாக்டர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மம்தா, டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க மாட்டேன். மாநிலத்தில் எங்கு திரும்பினாலும் கலவரமாகவே இருக்கிறது. அரசியலமைப்பு விதிகளை நிலைகுலைய செய்ததற்காக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீதிக்காக போராடும் பெண் டாக்டரின் குடும்பத்திற்கும், மேற்கு வங்க மக்களுக்கும் துணை நிற்பேன். மேற்கு வங்க அரசு தனது கடமையில் இருந்து தவறி விட்டது என கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ