இன்றைய காலை முக்கியச் செய்திகள் | திமுகவுக்கு நெருக்கடி | பாலமேடு ஜல்லிக்கட்டு | 8 AM | 16-01-2026
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்க உள்ளது. ஜல்லிக்கட்டு துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பிற்கு பின்னர் உறுதி மொழி எடுக்கப்பட்ட பின் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இதற்கான இறுதி கட்ட ஏற்பாட்டு பணிகள் தீவிதமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 ஜல்லிக்கட்டு காளைகள் 600 மாடு பிடி வீரர்களுக்கு பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டி 12 சுற்றுகளாக நடைபெறும் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் வீதம் களமிறக்கப்படுவர் 11 சுற்றுகளில் அதிகம் பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றில் அனுமதி வழங்கப்படுவர் ஓவ்வொரு சுற்றிலும் அதிக காளையை பிடித்த வீரர்களின் பெயர் LED திரையில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடு பிடி வீரர் மற்றும் ஜல்லிக்கட்டு காளைக்கு தமிழ்நாடு துணை முதல்வர் சார்பில் கார் மற்றும் துணை முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.