உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 15-08-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 15-08-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அந்த தேதிகளில் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் வருவதால் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் தேதி மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை