உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 16-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 16-06-2025 | Short News Round Up | Dinamalar

மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. மேலும், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்ததாவது; மதுரையில் ஜூன் 22 ல் மதியம் 3 முதல் இரவு 8 மணி வரை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலினை அழைக்க அனுமதி கேட்டோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அதிமுக பொது செயலாளர் பழனிசாமி, திமுக பொது செயலாளர் துரைமுருகன், பாமக தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாராது அனைவரும் வர வேண்டும். இம்மாநாடு அன்று மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். மதசார்பற்ற நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்து மதத்தையும் சமமாக நடத்த வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படும். மாநாட்டில் அரசியல் பேசப்படாது. இது முழுவதும் பக்தி மாநாடு. மாநாட்டில் பத்து நாட்களுக்கு முன்பே அறுபடை வீடுகளின் கண்காட்சி அமைக்க திட்டமிட்டோம். அதற்கு அரசும் காவல்துறையும் பல்வேறு நெருக்கடிக்களை கொடுத்தன. நீதிமன்ற அனுமதிக்கு பின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது. அறுபடை வீடுகள் கண்காட்சி துவக்க விழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ