உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 20-08-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 20-08-2025 | Short News Round Up | Dinamalar

பார்லிமென்ட் நுாலக கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் பங்கேற்றனர். தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை கூட்டணி எம்பிக்களுக்கு மோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது சி.பி. ராதாகிருஷ்ணனின் எளிய குடும்ப பின்னணி மற்றும் அவரது பிற்படுத்தப்பட்ட சமூக பின்னணியை குறிப்பிட்டு பிரதமர் பேசினார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரம் குறித்து மோடி பேசியதாவது: நம் நாட்டை ஒரு முறை அல்ல, இரண்டு முறை பிரிவினை செய்தவர் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தம் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீரை வழங்கியது மிகவும் தவறான முடிவு. இந்த தவறை பின்னாட்களில் நேரு உணர்ந்து உள்ளார். இதுகுறித்து தன் செயலரிடம், இந்த ஒப்பந்தத்தால் நமக்கு எந்த பயனும் இல்லை என அவர் கூறியுள்ளார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது, முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானது என மோடி கூறினார். எதிர்க்கட்சி எம்பிக்களும் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இவரை தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை