செய்தி சுருக்கம் | 08 AM | 21-02-2025 | Short News Round Up | Dinamalar
சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், எவ்வளவு சீட் கிடைக்கும் என்பதை அறிய தனியார் அமைப்பு வாயிலாக சர்வே நடத்தியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், அதிமுக தனித்து போட்டியிட்டால் 94 தொகுதிகளை கைப்பற்ற முடியும். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பாஜவுடன் கூட்டணி அமைத்தால் கூடுதலாக ஐந்து தான் தேறும். பாமகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் 114 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பாமக, நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் 140 தொகுதிகளில் வெல்ல முடியும் என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாமகவையும், நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் பழனிசாமியை, அவரது சேலம் இல்லத்தில் தன் குடும்ப திருமண விழாவுக்கு அழைக்க பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார்.