உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர். தோற்றத்தில் வடமாநிலத்தவர் போல் இருப்பதால் தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது இல்லை. சில தினங்களுக்கு முன் கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், பல்லடம் போலீஸ் நிலைய எல்லையில் சோதனை நடத்தினர். அங்கு ஊடுருவி இருந்த வங்கதேசத்தினர் 29 பேரை கைது செய்தனர். அதன்பின், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில் ஏழு பேர் சிக்கினர். வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை