/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 23-12-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 23-12-2024 | Short News Round Up | Dinamalar
இந்து முன்னணி தமிழக தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்புடைய, 41 சிலைகளை கடத்தி சென்ற வழக்குகளின் ஆவணங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து காணாமல் போயுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழக அரசை கண்டித்த சுப்ரீம் கோர்ட் தமிழக உள்துறை செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள அரசும், போலீஸ் துறையும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். வழக்குகளின் ஆவணங்கள் போலீஸ் நிலையங்களிலேயே காணாமல் போயுள்ளன என்ற அவலம் அரங்கேறி இருப்பது வருத்தத்துக்கு உரியது.
டிச 23, 2024