உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 27-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 27-02-2025 | Short News Round Up | Dinamalar

சிவாலயங்களில் விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 கால பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது. கோவை ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மகா சிவராத்திரி விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. விடிய, விடிய சிறப்பு பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, வள்ளி கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரண்டிருந்த பக்தர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 கால பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வெகு சிறப்பாக நடந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நாட்டிய மாணவிகள் பங்கேற்று சிறப்பாக நடனம் ஆடினர். தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக பரதநாட்டிய மாணவிகளின் கண்கவர் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை