உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 27-10-2024 | Short News Round Up | Dinamalar

கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலுக்கு பின் இந்திய சீன ராணுவத்தினர், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர 4 ஆண்டுகளாக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அண்மையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய, சீன பிரதமர்கள், எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசினர். இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதியில் இருந்த இரு நாட்டு ராணுவத்தினரும் பின்வாங்கினர். இரு தரப்பிலும் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. இந்த சூழலில், புனேவில் உள்ள பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக கருத்து கூறினார். எல்லையை பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கம். இது அனைத்தும் ஒரு இரவில் நடந்து விடவில்லை. விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பால் சாத்தியமானது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் முக்கிய காரணம் . எல்லையில் படைகளை நிறுத்துவதற்கு பட்ஜெட்டில் 5 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால் கடும் குளிரிலும் நமது வலிமையை காட்ட முடிந்தது. எல்லையில் இயல்வு நிலை திரும்புவதற்கு மத்திய அரசு, ராணுவத்தின் கூட்டு முயற்சியும் காரணமாக இருந்தது என்றார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி