செய்தி சுருக்கம் | 08 AM | 29-06-2025 | Short News Round Up | Dinamalar
ஆக்சியம் 4 மிஷன் குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். நான்கு பேர் கொண்ட இந்த குழுவினர், 14 நாட்கள் தங்கி 60க்கும் அதிகமான ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர். விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் வெப்கேஸ்ட் நேரலையில் சுபான்ஷூ பேசினார். தாய் மண்ணில் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டீர்கள். உங்கள் பெயரில் சுபம் உள்ளது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம். விண்வெளியில் நமது தேசியக்கொடியை ஏந்தியதற்காக எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? எடுத்து சென்ற கேரட் அல்வாவை சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா என பிரதமர் மோடி கூறினார். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது வரைபடத்தை விட இந்தியா பிரமாண்டமாகவும், பெரியதாகவும் தெரிகிறது. இந்த பயணம் எனக்கானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கானது. இந்தியர்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில் பெருமை அடைகிறேன். சுற்றுப்பாதையில் இருந்து தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை 16 முறை பார்க்கிறோம். இந்த திட்டம் நமது நாட்டிற்கு ஒரு துவக்கம் தான். விரைவில் நமக்கு என தனியாக விண்வெளி நிலையம் கிடைக்கும். நாங்கள் பல நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். ஆனால் மனநிறைவு எங்களை அமைதியாக இருக்க உதவுகிறது. நான் என்னுடன் கேரட் அல்வா, பாசிபருப்பு அல்வா கொண்டு வந்துள்ளேன். மற்ற நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் இந்திய சமையல் ருசியை அனுபவிக்க வேண்டும் என எண்ணினேன். அனைவரும் ஒன்றாக சாப்பிட்டோம். அனைவருக்கும் பிடித்து இருந்தது. உங்களின் வாழ்த்துக்காகவும், 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என சுபான்ஷு பேசினார்.