இன்றைய மதிய முக்கியச் செய்திகள் | பிரதமர் மோடி உருக்கம் | 08 PM | 01-11-2025
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நயா ராய்ப்பூர் பகுதியில் விழா நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று ரூ.14,260 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: வறுமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதன் அருமை எனக்கு தெரியும். இதனால் பிரதமரான பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன். சத்தீஸ்கர் மாநிலம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுதும் 125 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்தது. தற்போது 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் ஆதிக்கம் உள்ளது. நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு வருகின்றனர். நக்சல் பாதிப்பில் இருந்து நாடு முற்றிலும் விடுதலை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்கள் வாழ்க்கையில் உள்ள இடர்பாடுகளை அகற்ற அரசு பாடுபட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார். #KarurStampede #CBIProbe #TVKVijay #FaroFocus #3DScanner #TamilNaduTragedy #VijayRally #StampedeInvestigation #Velusamypuram #PublicSafety