உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| கரூர் செல்கிறார் முதல்வர் | 8 PM | 02-07-2026 | DINAMALAR

இன்றைய இரவு முக்கியச் செய்திகள்| கரூர் செல்கிறார் முதல்வர் | 8 PM | 02-07-2026 | DINAMALAR

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, பெண்களை, சைவம், வைணவத்துடன் ஒப்பிட்டு இழிவாக வகையில் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொன்முடிக்கு எதிராக, சென்னை மாநகராட்சி பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அருவருக்கத்தக்க முறையில் பேசிய பொன்முடி மீது மத ரீதியாக வெறுப்புணர்வு ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என கோரினார். தற்போது இந்தவழக்கு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், பொன்முடி மனுதாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். பொன்முடி தரப்பில் வாதிடும்போது, மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர அரசு அனுமதி பெறப்படவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டது. எதிர்தரப்பினர் வாதிடும்போது, பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக ஐகோர்ட் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்தது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது. தமது பேச்சு ஊடகங்களில் வெளியாகும் எனத் தெரிந்தே சர்ச்சையாக பேசியுள்ளார். எனவே வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #DMKfails #Ponmudi #Saivam #Vaishnavam #MadrasHighCourt #HighCourt #TamilNaduPolitics #CourtVerdict #LegalNews #PoliticalControversy #ReligiousRemarks #FreedomOfSpeech #IndianJudiciary #BreakingNews #TamilNews #CurrentAffairs #Politics #Chennai #BJP #CaseUpdate #Dinamalar #NewsUpdate #TamilNaduUpdates

ஜூலை 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !