இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | சிபிஐ விசாரணை தேவை | 8 PM | 04-06-2026
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்? நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது. தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேர சக்தி? ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும் என பழனிசாமி கூறி உள்ளார் #EPS #TVK #NainarNagendran #AnbumaniRamadoss #TNPolitics2026 #TNEBDataTheft #CBI #TNEB #DataEraseScam #DMKvsTVK #HardDisk #Crime