செய்தி சுருக்கம் | 08 PM | 05-05-2025 | Short News Round Up | Dinamalar
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை, முப்படைகளுக்கும் பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இந்நிலையில், மே 7ம் தேதி போர் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. விமான தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த ஒத்திகை, பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒருவேளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், தங்களை பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்வது என்பது பற்றியும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் ஏற்கனவே, போர் ஒத்திகைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.