இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |செங்கோட்டையனுக்கு பின்னால் திமுக | 8 PM | 07-11-2025
பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். என்டிஏ கூட்டணி ஆட்சியில் பீகார் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதிஷ் - மோடி கூட்டணியில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பீகாரில் நடக்கும் டபுள் இஞ்ஜின் அரசை மக்கள் ஆதரிக்கின்றனர். ஆர்ஜேடியின் பொய் மூட்டைகளை வாக்காளர்கள் நம்ப தயாராக இல்லை. அவர்களின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர்களே அந்த வாக்குறுதிகளை நம்புவதில்லை. அதனால் தான், ஆர்ஜேடியின் வாக்குறுதி பற்றி காங்கிரஸ் தலைவர்கள் மேடைகளில் பேசுவதில்லை. ஆர்ஜேடியின் காட்டாச்சியை மக்கள் ஒரு போதும் மீண்டும் அனுமதிக்க மாட்டார்கள். என்டிஏவின் நல்லாட்சியே தொடர வேண்டும் என விரும்புகின்றனர். முதல்கட்ட தேர்தலில் நடந்த ஓட்டுப்பதிவிலேயே இது தெளிவாக தெரிந்து விட்டது. பீகார் வளர்ச்சிக்காக ஏற்கனவே பல திட்டங்களை நிறவேற்றியுள்ள என்டிஏ அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் என பிரதமர் மோடி பேசினார். #Biharelection| #RJD| #BJP| #INC| Rahul| Modi| Nitish| Tejaswi| Lalu|