உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 07-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 07-01-2025 | Short News Round Up | Dinamalar

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷ்னர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கும் என்றும், 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ம் தேதி நடக்குமெனவும், ஜனவரி 20ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல், மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிப்ரவரி 8-ம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ