இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரசாரம் ஓய்ந்தது! | 8 PM | 06-04-2026
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதலாவதாக, அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதனால், இன்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதி நாளான இன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் பேரணி நடத்தி ஓட்டு சேகரித்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 தொகுதிகளில் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளத்தில் மொத்தம் 140 தொகுதிகள். 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளனர். 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.