உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரதமர் மோடி பெருமிதம் | 8 PM | 08-11-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | பிரதமர் மோடி பெருமிதம் | 8 PM | 08-11-2026

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் கோவை, கல்வீரம்பாளையம் குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து பாரம்பரிய பலகாரங்களை பகிர்ந்து சமத்துவ தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். கோவை மாவட்டம், குறுக்கிலியம்பாளையத்தில் தனசேகர் - துர்கா தம்பதி தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர். திருப்பூர், சிடிசி கார்னரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர். காஞ்சிபுரத்தில் கேதார கௌரி விரத பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். இதனால் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நவ 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !