செய்தி சுருக்கம் | 08 PM | 09-02-2025 | Short News Round Up | Dinamalar
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு பிரிவினர் இடையே கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக அம்மாநில முதல்வர் பிரேன்சிங் மன்னிப்பு கேட்டு இருந்தார். இதற்கிடையே மணிப்பூரில் வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இதற்கிடையே பிரேன்சிங் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் பிரேன்சிங் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் கட்சியினருடன் இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மணிப்பூர் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என பிரேன் சிங் கூறியுள்ளார்.