உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |13 மாவட்டங்களில் கனமழை | 8 PM | 09-11-2025

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |13 மாவட்டங்களில் கனமழை | 8 PM | 09-11-2025

பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட 1,314 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் 64.66% ஓட்டுகள் பதிவானது. 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று தங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இண்டி கூட்டணியின் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்தனர். இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவ. 11-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவ. 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !